Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்? | PhonePe Biometric Pay How to Use -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war
மதியம் சாதத்துக்கு ஒருமுறை இந்த மிளகாய் கிள்ளி சாம்பாரை செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Milagai Killi Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? ஆனால் நீங்கள் செய்யும் சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்காதா? மிகவும் சிம்பிளாக அதே சமயம் வித்தியாசமான சுவையைக் கொண்ட சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மிளகாய் கிள்ளி சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு மிளகாய் கிள்ளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 1 3/4 கப்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 5
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 15-20 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய பருப்பை குக்கரில் போட்டு, அதில் 1 3/4 கப் நீரை ஊற்றி,
பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்,
சீரகம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பை மத்து கொண்டு மசித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கிளறி, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி,
புளிச்சாற்றினை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மிளகாய்
கிள்ளி சாம்பார் தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications











