Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மெத்தி சிக்கன் குழம்பு
சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மெத்தி சிக்கன் குழம்பு செய்யுங்கள். இது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் சூப்பராக இருக்கும்.
சிக்கன் பிரியர்களே! உங்களுக்கு ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபி சாப்பிட ஆசையாக உள்ளதா? என்ன ரெசிபியை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக ஒரு அட்டகாசமான சிக்கன் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் மெத்தி சிக்கன் குழம்பு. இந்த குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் சூப்பராக இருக்கும். உங்களுக்கு மெத்தி சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே மெத்தி சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 3/4 கிலோ
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மெத்தி இலைகள்/வெந்தய கீரை - 1 கப்
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* கெட்டியான தேங்காய் பால் - 1/3 கப்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
* தயிர் - 2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச் துண்டு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பின் வெந்தய கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 7-8 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், மெத்தி சிக்கன் குழம்பு தயார்.
குறிப்பு:
* நல்ல ப்ளேவர் கிடைக்க நற்பதமான வெந்தய கீரையைப் பயன்படுத்துங்கள். உலர்ந்த வெந்தய கீரையைப் பயன்படுத்த வேண்டாம். அது சுவை மற்றும ப்ளேவரை முற்றிலும் மாற்றிவிடும்.
* சிக்கனை இரவு தூங்கும் போதே மசாலாக்களை சேர்த்து பிரட்டி ஊற வைத்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.
* இந்த குழம்பில் தக்காளி சேர்க்கவில்லை. அதற்கு மாறாகத் தான் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்டுள்ளது.
* தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டாம். மேலும் எலுமிச்சை சாற்றினை குழம்பை அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும்.
* முக்கியமாக குழம்பை தயாரித்த பின், 2 மணிநேரம் கழித்து பரிமாறினால், மெத்தி சிக்கன் குழம்பு இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











