Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
கொஞ்சம் கூட மசாலா சட்டியில் ஒட்டாம மீன் வறுவலை செய்யணுமா? அப்ப இந்த மாதிரி செய்யுங்க...
Meen Varuval Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே பலரும் வீட்டில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். இன்று நீங்கள் உங்கள் வீட்டில் மீன் எடுத்துள்ளீர்களா? நீங்கள் எப்போது மீன் வறுவல் செய்தாலும் மசாலா மீனில் ஒட்டாதா அல்லது மசாலா சட்டியிலேயே ஒட்டிக் கொள்ளுமா?
இதனாலேயே மீன் வறுவல் செய்ய கடுப்பாக இருக்குமா? அப்படியானால் இன்று நாங்கள் கொடுத்துள்ளவாறு மீன் வறுவல் செய்யுங்கள். இப்படி மீன் வறுவலை செய்தால், மீன் மசாலா சட்டியிலும் ஒட்டாது மற்றும் மீனிலும் மசாலா நன்கு ஒட்டி சாப்பிட சுவையாக இருக்கும்.

உங்களுக்கு வீட்டிலேயே மீன் வறுவல் மசாலாவை தயாரித்து மீன் ப்ரை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாவல் மீன் - 10 துண்டுகள்
* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் - சிறிது
* நீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மீனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மீனில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பிரட்டி 15 நிமிடம்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள்,
உப்பு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரி பவுடர் மற்றும் சிறிது
நீரை சேர்த்து ஓரளவு நீராக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்த மசாலாவை மீனின் மேல் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், மீன் துண்டுகளை சேர்த்து,
உடனே மீனை திருப்பை போடாமல் 2 நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு ப்ரை
செய்து எடுத்தால், மீன் வறுவல் தயார். இப்படி செய்யும் போது மசாலா
மீனில் நன்கு ஒட்டும் மற்றும் சட்டியில் சிறிதும் மசாலா ஒட்டாது.



Click it and Unblock the Notifications











