Just In
- 58 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 17 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 20 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
சுவையான... மீல் மேக்கர் கட்லெட்
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ஒரு சுவையான கட்லெட் செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் கட்லெட் செய்வது மிகவும் சுலபம் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
உங்களுக்கு மீல் மேக்கர் கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 200 கிராம்
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
* பிரட் தூள் - 2 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + வறுப்பதற்கு
* கொத்தமல்லி - சிறிது
* பால் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நிறைய நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, மூடி கொண்டு 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். இப்போது மீல் மேக்கர் பெரிதாகி இருக்கும். பின் அதை ஒரு அகலமான வடிகட்டியில் வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி, பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு மீல் மேக்கரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வேக வைத்துள்ள மீல் மேக்கரை எடுத்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து, அத்துடன் அரைத்த மீல் மேக்கரையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, அந்த மசாலாவை மீல் மேக்கருடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய பௌலில் சோள மாவு, மைதாவை போட்டு, சிறிது நீரை ஊற்றி சற்று நீராக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை எடுத்து மைதா கலவையில் பிரட்டி, அதன் பின் பிரட் தூளில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மீல் மேக்கர் கட்லெட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi