Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Masoor Toor Dal Dosa With Peanut Chutney Recipe In Tamil: காலையில் தோசைக்கு மாவு இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் மசூர் துவரம் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுடலாம். அதுவும் இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய வேர்க்கடலை சட்னி என்பதால் சுவை பிரமாதமாக இருக்கும். அதோடு இந்த டிபன் காம்போ ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. குறிப்பாக புரோட்டீன் அதிக நிறைந்த டிபன் என்பதால், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

உங்களுக்கு இந்த துவரம் பருப்பு தோசையும், தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு தோசை மற்றும் தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு தோசைக்கு...
* மசூர் பருப்பு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* தக்காளி - 1
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சைமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் மசூர் பருப்பை எடுத்துக்
கொண்டு, நீரை ஊற்றி, 2 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 1/2 மணிநேரம் கழித்து, பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, பின்
அரைத்த மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன், 1/2 கப் ரவை, நறுக்கிய 1
தக்காளி, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது
நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் 1/4
கப் நீரை ஊற்றி அலசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 2
மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின் அதில் 100 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 4 பல்
பூண்டு, சிறிய துண்டு புளியை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,
ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
அரைத்து வைத்துள்ள தோசை மாவை நன்கு கலந்து, தோசையாக ஊற்றி, மிதமான
தீயில் வைத்து, தோசையின் மேலே எண்ணெய் ஊற்றி தடவி விட்டு,
மொறுமொறுவென்று வேக வைத்து மடித்து எடுத்தால், துவரம் பருப்பு தோசை
தயார்.
குறிப்பு:
* இந்த துவரம் பருப்பு தோசைக்கு மாவை அரைத்ததும் புளிக்க வைத்து
தான் தோசை ஊற்ற வேண்டும் என்றில்லை, அரைத்ததும் கூட தோசை
ஊற்றலாம்.
* வேர்க்கடலை சட்னிக்கு தேங்காய் சேர்க்காமல் செய்வதால், சட்னி
விரைவில் கெட்டுப் போகாது.



Click it and Unblock the Notifications
