Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. தோசை, சப்பாத்திக்கு இப்படியொரு சைடு டிஷ்ஷை ட்ரை பண்ணுங்க...
Toor Dal Kurma Recipe In Tamil: தோசை, சப்பாத்தி, இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அடிக்கடி ஏதாவது வித்தியாசமான சுவையைக் கொண்ட சைடு டிஷ்ஷை செய்ய விரும்புவீர்களா? அப்படியானால் அடுத்த முறை துவரம் பருப்பை வெச்சு ஒரு குருமாவை ட்ரை பண்ணுங்கள்.
இந்த துவரம் பருப்பு குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது வேலைக்கு செல்பவர்கள் செய்வதற்கு ஏற்றவாறு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு துவரம் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/4 கப்
* தேங்காய் - 1/4 மூடி
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் நீரை ஊற்றி 1/2
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய் மற்றும் ஊற வைத்த
துவரம் பருப்பை நீருடன் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின், அரைத்து
வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு
கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான துவரம் பருப்பு குருமா தயார்.
Image Courtesy: Micoope



Click it and Unblock the Notifications
