Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ரோட்டுக்கடையில் விற்கும் மசாலா சுண்டல் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... இனிமே கடைக்கு போகவே மாட்டிங்க...!
Street Style Masala Sundal Recipe: சாலையோர உணவுகளுக்கு என்று எப்போதும் ஒரு தனிச்சுவை உள்ளது. எவ்வளவு செலவழித்தாலும் பெரிய ஹோட்டல்களில் கூட ரோட்டு கடைகளில் கிடைக்கும் சில உணவுகளைப் போல சுவையான உணவுகள் கிடைக்காது. அப்படிப்பட்ட சுவையான சாலையோர உணவுகளில் ஒன்றுதான் மசாலா சுண்டல்.
பெயரில் சுண்டல் என்று இருந்தாலும் உண்மையில் இது செய்யப்படுவது பச்சை பட்டாணியில்தான். சத்துக்கள் நிறைந்த பச்சைப் பட்டாணியை இதுபோல சுவையாக செய்துக் கொடுக்கும்போது குழந்தைகளும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்தான மற்றும் சுவையான இந்த மசாலா சுண்டலை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சை பட்டாணி - 1 கப்
- உருளைக்கிழங்கு - 2
- தக்காளி - 1
- பூண்டு - 3 பல்
- இஞ்சி - ஒரு துண்டு
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- புளிச்சாறு - 2 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 துண்டு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- 1 கப் பச்சை பட்டாணியை 5 முதல் 7 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
- பச்சை பட்டாணி நன்கு ஊறியதும் உருளைக்கிழங்கை நறுக்கி இரண்டையும் குக்கரில் போட்டு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை விட்டு வேகவைக்கவும்.
- பிரஷர் குக்கர் ஆறியவுடன் மூடியைத் திறந்து பாதி பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை தனியாக எடுத்துக்கொண்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒரு சிறிய இலவங்கப்பட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- இந்த கலவை நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து ஆறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல அரைக்கவும்.
- பின்னர் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து வதக்கி பின் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- 3 முதல் 5 நிமிடம் வரை இதை கொதிக்க விடவும், பின்னர் அதில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து 7 - 8 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- இப்போது தனியாக மசித்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை இதில் சேர்த்து சில் நிமிடம் கொதிக்க விடவும்.
- நன்கு வெந்து வந்ததும் இதில் பச்சை வெங்காயம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சாலையோர சுவையான மசாலா சுண்டல் ரெடி!



Click it and Unblock the Notifications












