மணமணக்கும்... மஞ்சப்பால் கத்திரிக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Manjapaal Kulambu Recipe In Tamil: தினமும் மதியம் சாதத்துக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? எப்போதும் ஒரே மாதிரியான குழம்பை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை மஞ்சப்பால் கத்திரிக்காய் குழம்பை செய்யுங்கள்.

இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த குழம்பை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இந்த குழம்பு சுவையாக இருக்கும்.

Manjapaal Kulambu How To Make Coconut Milk Kuzhambu

உங்களுக்கு மஞ்சப்பால் கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சப்பால் கத்திரிக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் பால் கலவையை ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மஞ்சப்பால் கத்திரிக்காய் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 12, 2026, 14:20 [IST]
Desktop Bottom Promotion