Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்
Mangalore Cucumber Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு நேர உணவாக இருப்பது இட்லி, தோசைதான். ஆனால் பெரும்பாலும் அவற்றுக்கு ஒரே மாதிரியான சட்னிதான் செய்யப்படுகிறது. திரும்பவும் அதே சட்னியா என வீட்டில் அலுத்து கொள்கிறார்களா? புதிதாக என்ன சட்னி செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட அதிலும் வெயில் காலத்துக்கு ஏற்ற மங்களூர் ஃபேமஸ் வெள்ளரிக்காய் சட்னியை செய்யுங்கள்.
வெள்ளரிக்காயை நாம் பொதுவாக மிளகாய் பொடியுடன் வைத்து அப்படியேதான் பச்சையாக சாப்பிடுவோம். ஆனால் வெள்ளரிக்காயை வைத்து இட்லி, தோசைக்கு ஒரு அட்டகாசமான சட்னியை செய்யலாம். வெயில் வேகமாக அதிகரித்து வரும் இந்த சீசனில் இந்த சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். இந்த சட்னி ஆரோக்கியமானது மட்டுமல்ல, சுவையானதும் கூட. ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்து தர கேட்பார்கள்.

உங்களுக்கு மங்களூர் ஃபேமஸ் வெள்ளரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஃபேமஸ் வெள்ளரிக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 வெள்ளரிக்காய்
- 2 காஷ்மீரி மிளகாய்
- 2 வர மிளகாய்
- சிறிதளவு புளி
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் வெள்ளரிக்காயை நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கடுகு, காஷ்மீரி மிளகாய், வர மிளகாய், உப்பு மற்றும் புளி ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காயை அரைத்த தேங்காய் விழுதுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வெள்ளரிக்காய் முழுதாக அரைபட்டு விடக்கூடாது.
- பின்னர் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயை சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, உடைத்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும், இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெடி.இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
