Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்த கஞ்சியை காலையில 1 கப் குடிச்சா.. ஒரு மாசத்துல 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Kuthiraivali Pachaipayaru Kanji Recipe In Tamil: நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்களா? உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், முதலில் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உணவுகளினால் தான் ஒருவரது உடல் எடை அதிகரிக்கிறது. எனவே உண்ணும் உணவை சரிசெய்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
அதுவும் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், சிறுதானிய கஞ்சி தான் மிகச்சிறந்த காலை உணவு. அதுவும் குதிரைவாலி அரிசியுடன் பச்சை பயறு சேர்த்து கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும் இந்த கஞ்சியை ஒரு கப் குடித்தாலே வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்.

உங்களுக்கு இந்த குதிரைவாலி பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி பச்சை பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குதிரைவாலி அரிசி - 3/4 கப்
* பச்சை பயறு - 1 கப்
* பூண்டு - 5 பல்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப் + தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1 கையளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* மறுநாள் காலையில் குதிரைவாலி அரிசியை குக்கரில் எடுத்து, அதை 4 முறை
நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய குதிரைவாலி அரிசியுடன், ஊற வைத்த பச்சை பயறை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் பூண்டு பற்கள் மற்றும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் அரிசியும், பயறும் மூழ்கும் அளவில் ஒரு 5 கப் நீரை
ஊற்ற வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, அந்த குக்கரை
அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் குக்கரை மூடி, அரிசியும், பருப்பும் நன்கு குலையும் வகையில்
ஒரு 7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து நன்கு கலந்து விட வேண்டும்.
* கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து
விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை தூவி கிளறினால், சுவையான குதிரைவாலி
பச்சை பயறு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications





