Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்? | PhonePe Biometric Pay How to Use -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
கோவைக்காயை அடுத்தமுறை இப்படி துவையல் செய்யுங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
Kovakkai Thogayal: இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை தானா? அந்த தோசைக்கு அற்புதமான சைடு டிஷ்ஷை யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கோவைக்காயைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த கோவைக்காயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் துவையல் செய்யலாம் தெரியுமா? இந்த கோவைக்காய் துவையல் தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கோவைக்காய் துவையல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கோவைக்காய் - 500 கிராம்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு
* சின்ன வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* நாட்டு தக்காளி - 1
* பூண்டு - 2 பல்
* உப்பு - 1 டீஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* குண்டு வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் கோவைக்காயை கழுவி, அதை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கோவைக்காயை சேர்த்து 7-8 நிமிடம் நன்கு வதக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு,
வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் புளி சேர்த்து குறைவான தீயில் வைத்து
சில நொடிகள் வறுத்து இறக்கி, அதை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து
நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து சில நிமிடங்கள் தக்காளி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் உப்பு, வெல்லம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு
நிமிடம் வதக்கி, இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கடைசியாக, மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கடுகு,
கறிவேப்பிலை, குண்டு மிளகாய் சேர்த்து சில நொடிகள் தாளித்து,
துவையலுடன் சேர்த்து கிளறினால், சுவையான கோவைக்காய் துவையல்
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











