Latest Updates
-
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்? | PhonePe Biometric Pay How to Use
கோவைக்காயை இப்படி ஒருவாட்டி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துடும்...
Kovakkai Gravy Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் அசைவ கிரேவியை தோற்றுப் போகும் அளவில் ஒரு சைவ கிரேவியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் இருந்தால், அதைக் கொண்டு ஸ்பெஷல் மசாலா அரைத்து கிரேவி செய்யுங்கள்.
இந்த பக்குவத்தில் கிரேவி செய்யும் போது, அது சூடான சாதம், சப்பாத்தி, பூரி, நாண் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி அசைவ கிரேவியின் சுவையை மிஞ்சும் வகையில் ருசியாக இருக்கும். ஒருமுறை இந்த கிரேவியை செய்தால், பின் நிச்சயம் வாரம் ஒருமுறை செய்து சாப்பிடுவீர்கள். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கோவைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோவைக்காய் - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸபூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 6
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கசகசா - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
பொடி செய்வதற்கு...
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, அதன் முனைகளை நீக்கிவிட்டு, 4
துண்டுகளாக கீறிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து
வதக்கி, அத்துடன் கசகசாவை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு இடி கல்லில் சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து நன்கு இடித்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கோவைக்காயை சேர்த்து நன்கு சுருங்க வதக்கி,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கிளறி, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லித் தூள்
மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை 3-4 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள கோவைக்காயை
சேர்த்து கிளறி, மசாலா ஒன்று சேர 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி, இடித்து வைத்துள்ள மிளகு
சீரக பொடியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கோவைக்காய் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











