Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
வீட்டுல கோவக்காய் இருக்கா? அப்ப சப்பாத்திக்கு இப்படி மசாலா செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்...
Kovakkai Masala Curry Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கோவக்காய் கறியை செய்யுங்கள்.
இந்த கோவக்காய் மசாலா கறி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை கோவக்காயை இப்படி சமைத்தால், அடுத்தமுறை இப்படி தான் செய்வீர்கள்.

உங்களுக்கு கோவக்காய் மசாலா கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவக்காய் மசாலா கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோவக்காய் - 1/4 கிலோ
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 4 (அரைத்தது)
* தண்ணீர் - 1/2 கப் + 1 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப் (பொடித்துக் கொள்ளவும்)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கோவக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு,
நான்கு பகுதிகளாக கீறி விட வேண்டும். முழுமையாக துண்டுகளாக்கிவிட
வேண்டாம்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கோவக்காயை சேர்த்து நன்கு தோல் சுருங்கும்
வரை வதக்க வேண்டும்.
* பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு எண்ணெய்
பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி, பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை
சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் வதக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து கிளறி, மிதமான
தீயில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா மற்றும்
சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கோவக்காய் மசாலா கறி
தயார்.



Click it and Unblock the Notifications











