Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
கொத்தமல்லி விதைய வெச்சு சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Coriander Seeds Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? அதேப் போல் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான சட்னியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் மல்லி விதைகள் உள்ளதா? அப்படியானால் அந்த மல்லி விதைகளைக் கொண்டு சட்னியை செய்யுங்கள்.
கொத்தமல்லி விதையில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளன. இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் தான், இந்த விதைக்கு தனித்துவமான ப்ளேவரைத் தருகிறது. இந்த கொத்தமல்லி விதை சட்னி செய்வது மிகவும் சுலபம். மேலும் இது இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி விதை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி விதை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு...
* கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* சின்ன வெங்காயம் - 10
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 இன்ச் துண்டு
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கொத்தமல்லி விதைகள், உளுத்தம் பருப்பு,
வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த மல்லி, உளுத்தம் பருப்பு மற்றும்
வரமிளகாயை சேர்த்து, அத்துடன் வெங்காயம், துருவிய தேங்காய், புளி,
வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கொத்தமல்லி விதை
சட்னி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications