Latest Updates
-
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
கொத்தமல்லி நிறைய இருக்கா? இப்படி துவையல் செய்யுங்க... இட்லி, தோசைக்கு நல்லா இருக்கும்..
Kothamalli Thogayal Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போறீங்களா? அதற்கு நல்ல சைடு டிஷ்ஷை யோசிக்குறீங்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி நிறைய இருக்கா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு துவையல் செய்யுங்கள்.
இந்த கொத்தமல்லி துவையல் இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். வேண்டுமானால், சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம். இது சத்தான ரெசிபி மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ரெசிபி. வேலைக்கு செல்வோர் காலையில் 10 நிமிடத்தில் ஒரு துவையல் செய்ய நினைத்தால், இதை செய்யலாம்.

உங்களுக்கு கொத்தமல்லி துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொத்தமல்லி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3-ஜ
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 இன்ச் துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு, வரமிளகாய், புளி
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொரகொரவென்று பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்தால், சுவையான கொத்தமல்லி
துவையல் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
