Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...!
Kongunadu Urulai Kurma Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் எண்ணற்ற வழிகளில் சமைக்கலாம். பொதுவாக உருளைக்கிழங்கை பொரியல், குழம்பு என செய்து சாப்பிடுவோம். ஆனால் கொங்கு ஸ்டைலில் உருளைக்கிழங்கை குருமாவை எப்போதாவது முயற்சித்துள்ளீர்களா?
இந்த கொங்குநாடு உருளைக்கிழங்கு குருமா இட்லி, தோசை சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இன்று மதியம் என்ன சமைப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தால் இந்த கொங்குநாடு உருளைக் குருமாவை டக்குனு செஞ்சுருங்க. உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக இந்த குருமா வைப்பது மிகவும் சுலபமானதும் கூட.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்பெஷல் உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்பெஷல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
- 1 கப் அரைத்த தக்காளி
- 1 வெங்காயம், நறுக்கியது
- 1 இன்ச் இஞ்சி, துருவியது
- 3 பூண்டு பல் , அரைத்தது
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
வறுத்து அரைக்க:
- 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 3 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் மிளகு
- 2 கிராம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 பிரியாணி இலை
- 1/2 கப் துருவிய தேங்காய்
செய்முறை:
- கொங்குநாடு உருளைக்கிழங்கு குருமாவை செய்வதற்கு , ஒரு சிறிய கடாயில் வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எண்ணெய் சேர்க்காமல் வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.
- பின்னர் இதை ஆற வைத்து, சிறிது வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும். இதை தனியாக வைக்கவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் துருவிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், அரைத்த தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகம் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், அரைத்த மசாலா சேர்த்து நன்கு கிளறவும். அதன்பின் வேகவைத்த நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து, வாணலியை மூடி, மசாலா உருளைக்கிழங்கில் நன்றாக சேரும் வரை கொதிக்க வைக்கவும்.
- குருமா நன்கு கொதித்து கெட்டியானதும் உப்பு சரிபார்த்து நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கொங்குநாடு உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதை சூடான தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











