Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Kollu Kuzhi Paniyaram With Coconut Chutney Recipe In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? நல்ல சுவையான உணவுகளை உட்கொண்டு உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அதுவும் ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் கொள்ளு இருந்தால், அதைக் கொண்டு குழிப்பணியாரம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியை செய்து சாப்பிடுங்கள்.

இந்த டிபன் காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதில் உள்ள கொள்ளு கொழுப்பைக் குறைத்து தசைகளை வலுவாக்கும். முக்கியமாக உடல் எடையை குறைப்போருக்கு இது சிறந்த காலை உணவு.
உங்களுக்கு இந்த கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு குழிப்பணியாரம் மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* கொள்ளு - 1 1/2 கப்
* மாவு பச்சரிசி - 1 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுந்து - 3/4 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
மாவு தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
தேங்காய் சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு, பச்சரிசி, இட்லி அரிசி,
உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, நீரில் 2 முறை கழுவ
வேண்டும். பின் அதில் நீரை ஊற்றி, 5-6 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 6 மணிநேரம் கழித்து ஊற வைத்ததை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி மாவில் சேர்த்து, பின் அதில் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கைகளால் கலந்து, மூடி வைத்து, 8 மணிநேரம் புளிக்க
வேண்டும்.
* மாவு புளித்த பின், அந்த மாவை நன்கு கரண்டியால் கிளறி, பாதி மாவை
மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை
வதக்கி இறக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் சிறிது
எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி,
முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கொள்ளு
குழிப்பணியாரம் தயார்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
புளி ஆகியவற்றை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications