Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
இந்த கஞ்சியை வாரம் 2 முறை குடிங்க.. உடம்பில் உள்ள விடாப்பிடியான கொழுப்பு கரைஞ்சு உடல் எடை வேகமா குறையும்...
Kollu Kanji For Weight Loss In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? உங்கள் டயட்டில் காலை வேளையில் பெரும்பாலும் பிரட் டோஸ்ட், சாலட் என்று தான் இருக்குமா? இப்படியான காலை உணவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சுவையான அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கொள்ளு கொண்டு கஞ்சியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த கொள்ளு கஞ்சியை வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால், உடம்பில் தேங்கியுள்ள விடாப்பிடியான கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவி புரியும். இது தவிர கொள்ளுவில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதனால் இந்த கொள்ளுவை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் போது, சிறுநீரக கற்கள் தடுக்கப்படும், சர்க்கரை நோய்க்கு நல்லது, எடை இழப்பிற்கு உதவும், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கும்.

இவ்வளவு சத்துக்களை கொள்ளு கொண்டிருந்தாலும், அது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால், இதை வாரத்திற்கு 2 முறைக்கு மேல் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் சூடு பிடித்து அவதிப்பட நேரிடும். முக்கியமாக கொள்ளு கஞ்சியை குடிப்பதால், தொப்பை குறைவது மட்டுமின்றி, தசைகள் இறுக்கமடைந்து உடலும் இரும்பு போல வலுவாகும்.
உங்களுக்கு கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1/4 கப்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* அவல் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 1/2 டம்ளர் + 1 டம்ளர்
* தயிர் - 1 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் கொள்ளு
சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அத்துடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வறுத்து
இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் அவலை
சேர்த்து அதையும் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு விதைகள், வெந்தயம் மற்றும்
அவலை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் 4 1/4 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
அரைத்து வைத்துள்ள கொள்ளு கஞ்சி பொடியை சேர்த்து கட்டிகளின்று கலந்து
விட வேண்டும்.
* பின் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு கப் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 1 டம்ளர்
நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பையும் சேர்த்து, நன்கு மோர் போன்று
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அடித்து வைத்துள்ள மோரை கஞ்சியுடன் சேர்த்து கலந்து, மேலே 1
டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை தூவி கிளறினால், சுவையான கொள்ளு கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications