Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
சத்தான மற்றும் சுவையான... கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல்
Kerala Style Pachai Payaru Kadayal: பச்சை பயறு ஏராளமான புரோட்டீனைக் கொண்ட ஒரு சுவையான மற்றும் சத்தான பயறு. இந்த பச்சை பயறை நாம் ஊற வைத்து பச்சையாகவே சாப்பிடலாம். இது தவிர பச்சை பயறை கடைந்து, அதை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
நீங்கள் பச்சை பயறை வீட்டில் சமைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையலை செய்யுங்கள். இந்த கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஆனால் என்ன இதை சமைக்க பச்சை பயறை குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 3/4 கப்
* வெங்காயம் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்த பச்சை பயறை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி
4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை தெளித்து, தக்காளியை சேர்த்து கிளறி,
தக்காளியை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து
சில நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் மத்து கொண்டு கடைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
வதக்கி, கடைந்து வைத்துள்ள பச்சை பயறுடன் சேர்த்தால், சுவையான கேரளா
ஸ்டைல் பச்சை பயறு கடையல் தயார்.
Image Courtesy: snazzycuisine



Click it and Unblock the Notifications











