Latest Updates
-
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா?
இட்லி,தோசைக்கு கத்திரிக்காயை இனி இப்படி துவையல் பண்ணுங்க..
Kathirikkai Ellu Thuvaiyal: கத்திரிக்காய் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒருஅற்புதமான காய்கறி. கத்திரிக்காயைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். இதுவரை கத்திரிக்காய் கொண்டு சாம்பார், சட்னி என்று செய்து சுவைத்திருப்போம்.
ஆனால் கத்திரிக்காயை எள்ளு விதைகளுடன் சேர்த்து கத்திரிக்காய் எள்ளு துவையவை செய்தால் அட்டகாசமாக இருக்கும். இந்த துவையல் இட்லி, தோசை, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்

இனிமேல் இட்லி, தோசைக்கு இப்படி துவையல் செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளோர் 2 இட்லியை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கத்திரிக்காய் எள்ளு துவையல் எப்படி செய்வன்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கத்திரிக்காய் எள்ளு துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைத் தெரிங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 500 கிராம்
* தண்ணீர் - 1/4 கப்
வதக்கி அரைப்பதற்கு...
* எள்ளு விதைகள் - 1/4 கப்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் கத்திரிக்காயைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 நிமிடம் கத்திரிக்காயை வேக
வைத்து இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து, கத்திரிக்காயின்
தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வேக வைத்த கத்திரிக்காயைப் போட்டு நன்கு
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளைப் போட்டு
பொன்னிறமாக குறைவான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதை ஈரமில்லாத ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து,
அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது உப்பு தூவி
நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை
சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து 6-7
நிமிடம் தக்காளியை நந்கு மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2
நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
* அடுத்து அதில் எள்ளு பொடியை சேர்த்து, நெய் ஊற்றி கிளறி இறக்கி,
எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதிவ் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து தாளித்து, அதை துவையல்
மேல் ஊற்றி, சிறிது எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான கத்திரிக்காய்
எள்ளு துவையல் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications