Latest Updates
-
ஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இந்த அறிகுறிகளை செக் பண்ணி பாருங்க...! -
மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்? | PhonePe Biometric Pay How to Use -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Kathirikai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் கத்திரிக்காய் நிறைய உள்ளதா? எப்போதும் கத்திரிக்காயைக் கொண்டு சாம்பார் அல்லது பொரியல் தான் செய்வீர்களா? அதுவும் பொரியல் செய்தால், அதை ஒரே மாதிரி தான் எப்போதும் செய்வீர்களா? அப்படியே கத்திரிக்காயை சமைத்தாலும், நீங்கள் மட்டும் தான் சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் யாரும் சாப்பிடமாட்டார்களா?
அப்படியானால் அடுத்தமுறை கத்திரிக்காயைக் கொண்டு புதுமையான முறையில் பொரியல் செய்யுங்கள். இப்படி செய்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கத்திரிக்காய் பொரியலானது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கத்திரிக்காய் - 1/4 கிலோ(நீளவாக்கில் நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வறுத்த வேர்க்கடலை - 2 கைப்பிடி
* பூண்டு - 7-8 பல்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* கடலைப் பருப்பும், உளுத்தம் பருப்பும் பொன்னிறமானதும், அதில்
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம்
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, ஒரு கையளவு நீரைத் தெளித்து நன்கு
கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும். அப்படி வேக வைக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க
அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
* கத்திரிக்காய் வெந்துவிடுவதற்குள், மிக்சர் ஜாரில் வறுத்த
வேர்க்கடலை மற்றும் தோலோடு பூண்டு பற்களை சேர்த்து கொரகொரவென்று
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* கத்திரிக்காய் வெந்த பின், மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள
பொடியை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், சுவையான
கத்திரிக்காய் பொரியல் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











