பூரி, சப்பாத்திக்கு ஒருடைம் இந்த மாதிரி சிக்கன் மசாலா செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா மஜாவா இருக்கும்...

Posted By:

Kashmiri Chicken Masala Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் காலையில் ஸ்பெஷலாக பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் சிக்கனை சமைப்பீர்களா?

அடுத்தமுறை பூரி, சப்பாத்திக்கு சிக்கனை செய்வதாக இருந்தால், காஷ்மீரி சிக்கன் மசாலாவை செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, நன்கு காரசாரமாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் இருக்கும்.

Kashmiri Chicken Masala How To Make a Kashmiri Chicken Masala Recipe

உங்களுக்கு காஷ்மீரி சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஷ்மீரி சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 கப்
* பட்டை - 2
* மிளகு - 25
* கருப்பு ஏலக்காய் - 3
* அன்னாசிப்பூ - 2
* பச்சை ஏலக்காய் - 4
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4-5 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* பிரியாணி மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 10
* சிக்கன் - 1 1/2 கிலோ
* தயிர் - 250 கிராம்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, மிளகு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள் தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, பிரியாணி மசாலாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து சிக்கனை கழுவி சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட்டு, வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் தயிரை சேர்த்து 1 நிமிடம் கிளறி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, முடி வைத்து 10-15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான காஷ்மீரி சிக்கன் மசாலா தயார்.

Image Courtesy: The Kitchen

[ of 5 - Users]
Story first published: Sunday, August 4, 2024, 9:27 [IST]
Desktop Bottom Promotion