Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
கறிவேப்பிலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த சத்தான சட்னியை அரையுங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
Karuveppilai Onion Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வழக்கமான தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சாப்பிட்டு போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், அதை தூக்கி எறிந்து விடாதீர்கள்? அப்படியானால் இனிமேல் அதை தூக்கி எறியாமல், அந்த கறிவேப்பிலையை வைத்து அருமையான சட்னி செய்யுங்கள்.
இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சற்று கெட்டியாக அரைத்தால், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இப்படி கறிவேப்பிலையை சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் மற்றும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் கறிவேப்பிலை சட்னி செய்தால், கறிவேப்பிலை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கறிவேப்பிலை - 1 கப்
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 3
- கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- தேங்காய் துருவல் - கால் கப்
- பூண்டு பல் - 5
- நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - அரை டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு கறிவேப்பிலையை நன்றாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும், உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் உரித்த சின்ன வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.
- பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் சிறிது கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னி மீது கொட்டினால் சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
- இந்த சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications