Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
கருப்பட்டி பொங்கல்
பொங்கல் பண்டிகை வரப்போகிறது. பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கருப்பட்டி பொங்கல். இந்த வகை பொங்கலில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது செரிமானத்திற்கும் நல்லது.
பொங்கல் பண்டிகை வரப்போகிறது. பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கருப்பட்டி பொங்கல். இந்த வகை பொங்கலில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது செரிமானத்திற்கும் நல்லது. இந்த பொங்கல் பண்டிகையன்று ஒரு நல்ல சுவையான பொங்கல் செய்ய நினைத்தால், இந்த கருப்பட்டி பொங்கலை செய்யுங்கள். நீங்கள் சிம்பிளாக குக்கர் பொங்கல் செய்ய நினைப்பவராயின், இந்த பொங்கலை செய்யலாம்.

உங்களுக்கு கருப்பட்டி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பட்டி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/3 கப்
* பாசிப்பருப்பு - 1/8 கப்
* தண்ணீர் - 2 கப்
* ஏலக்காய் பவுடர் - 1 சிட்டிகை
* முந்திரி - 10-15
* உலர் திராட்சை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாகு தயாரிக்க...
* கருப்பட்டி - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் ஊற்றி நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் கழுவிய அரிசியை சேர்த்து, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி குறைவான தீயில் 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வையுங்கள். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய்யை ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
குறிப்பு:
* பொங்கலில் இனிப்பு சுவை தூக்கலாக இருக்க வேண்டுமானால், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பொங்கலின் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்க, சற்று நெய்யை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்களுக்கு கோவிலில் கொடுக்கும் பொங்கல் போன்று இருக்க வேண்டுமெனில், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்களுக்கு சுக்கு சுவை பிடிக்குமானால், சிறிது சுக்கு பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications