கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பொரி உருண்டை - 15 நிமிஷத்தில் மொறுமொறுன்னு எப்படி செய்றது-ன்னு பாருங்க..

Posted By:

Karthigai Deepam Special Pori Urundai Recipe In Tamil: கார்த்திகை தீபம் என்றாலே வீட்டை தீபங்களால் அலங்கரிப்பது தான் நினைவிற்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது என்றால் பொரி உருண்டை என்றே கூறலாம். கார்த்திகை தீபத்திருநாளில் பொரி உருண்டையை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த கார்த்திகை தீபத்திற்கு நீங்கள் இதுவரை எந்த ஸ்வீட்டும் வீட்டில் செய்யவில்லை என்றால், வீட்டில் பொரி இருந்தால், அதைக் கொண்டு 15 நிமிடத்தில் மொறுமொறுப்பான பொரி உருண்டையை டக்கென்று செய்யுங்கள். மேலும் பொரி உருண்டையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Karthigai Deepam Special Pori Urundai How To Make a Pori Urundai Recipe

உங்களுக்கு கார்த்திகை தீப ஸ்பெஷல் பொரி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொரி - 4 கப்
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லத்தை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, வெல்ல நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அகலமான பாத்திரத்தில் வடிகட்டிய வெல்ல நீரை மீண்டும் அடுப்பில் வைத்து, உயர் தீயில் வைத்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* வெல்லப்பாகுவின் பதம் பார்க்க வேண்டும். வெல்லப் பாகுவின் சரியான பதம் என்றால், ஒரு சிறிய கிண்ணத்தில் நீரை எடுத்து, அதில் சிறிது பாகுவை ஊற்றி, அதைத் திரட்டினால் கட்டி போன்று இறுக்கமாக வேண்டும். அப்படி இருந்தால் பாகு சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
* பாகு சரியான பதத்திற்கு வந்ததும், அதில் 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, உடனே பொரியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் கையில் நெய்யை தடவி, சூடாக இருக்கும் போதே, உருண்டை பிடித்து வைத்தால், சுவையான பொரி உருண்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, December 13, 2024, 16:47 [IST]
Desktop Bottom Promotion