Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
வெஜிடேபிள் குருமாவை அடுத்தமுறை இப்படி செய்யுங்க.. சிக்கன் குருமாவே தோத்துடும்..
Karnataka Style Vegetable Kuruma: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு வெஜிடேபிள் குருமா செய்யுங்கள். அதுவும் கர்நாடகா ஸ்டைலில் குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த ஸ்டைலில் குருமாவை செய்தால், ஒன்று சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சாப்பிடுவார்கள். மேலும் இந்த குருமாவானது வீடே மணக்கும் வகையில் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே கர்நாடகா ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மிக்ஸ்டு காய்கறிகள் - 1 கப் (1 கேரட், 5 பீன்ஸ், 1
உருளைக்கிழங்கு, ஒரு கையளவு பச்சை பட்டாணி)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 3
* கசகசா - 1 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 2 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* புளி - ஒரு சிறிய துண்டு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள்
அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்க
வேண்டும்.
* அடுத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, வேண்டுமானால் சிறிது உப்பையும்
சேர்த்து கிளறி, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, குருமாவில் நீர் அதிகமா
இருந்தால், மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, சில நிமிடங்கள் நீர்
வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கர்நாடகா ஸ்டைல்
வெஜிடேபிள் குருமா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications