ஜோத்புரி ஆலு ரெசிபி

உங்களுக்கு வட இந்திய உணவுகள் பிடிக்குமா? வீட்டில் அதை செய்து பார்க்க விரும்புவீர்களா? அப்படியானால் இன்று உங்களுக்கு ஜோத்புரி ஆலு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

Posted By:

உங்களுக்கு வட இந்திய உணவுகள் பிடிக்குமா? வீட்டில் அதை செய்து பார்க்க விரும்புவீர்களா? அப்படியானால் இன்று உங்களுக்கு ஜோத்புரி ஆலு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த ஜோத்புரி ஆலு சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது காரமாக மட்டுமின்றி, சற்று புளிப்பாகவும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Jodhpuri Aloo Recipe In Tamil

இப்போது ஜோத்புரி ஆலு ரெசிபியின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 2 (பெரியது)

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வரமிளகாய் - 1

* வெங்காய விதைகள் - 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு கடாயில் அதைப் போட்டு, உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி, உருளைக்கிழங்கு நன்கு வேகும் வரை வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், வெங்காய விதை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு, எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் மாங்காய் தூள் தவிர மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* இறுதியில் மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஜோத்புரி ஆலு தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, August 28, 2021, 14:37 [IST]
Desktop Bottom Promotion