Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் ஜவ்வரிசி, 1/2 கப் வேர்க்கடலை வெச்சு.. இப்படி ஒரு டிபனை செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட..
Javvarisi Verkadalai Kozhukattai Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசியும், வேர்க்கடலையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் கொழுக்கட்டை செய்யுங்கள்.
இந்த ஜவ்வரிசி வேர்க்கடலை கொழுக்கட்டை ருசியானது மட்டுமின்றி, செய்வதற்கும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த டிபனை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி வேர்க்கடலை கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வேர்க்கடலை கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மாவு ஜவ்வரிசி
மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* நன்கு குளிர்ந்த பின் வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு சிறிய மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பெரிய மிக்சர் ஜாரில் வறுத்த ஜவ்வரிசி மற்றும் வேர்க்கடலையை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த ஜவ்வரிசியை சேர்த்து, அத்துடன்
அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் கலவையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, துருவிய
1 கப் தேங்காய், 3 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் கையில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருளை வடிவில் பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வேர்க்கடலை
கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications











