கடைகளில் விற்கப்படும் பிரபலமான ஈரானி டீ ரெசிபி... இனிமே வீட்டிலேயே செய்யலாம்... எப்படி தெரியுமா?

Posted By:

Irani Tea Recipe in Tamil: உலகில் தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகளவு மக்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம் என்றால் அது தேநீர்தான். உணவை கூட மக்கள் போதுமென்று கூறிவிடுவார்கள், ஆனால் தேநீரை வேண்டாமென்று கூறமாட்டார்கள். அந்த அளவிற்கு தேநீர் மக்களின் வாழ்க்கையுடன் கலந்துள்ளது. தேநீரில் பல வகைகள் உள்ளது, அதில் கிட்டதட்ட அனைத்து வகை தேநீரையும் நாம் குடித்திருப்போம்.

சமீப காலமாக ஈரானி டீ என்ற தேனீர் மிகவும் பிரபலமாகி வருகிறது, கிட்டதட்ட அனைத்து ஊர்களிலுமே நாம் இந்த டீக்கடையை பார்த்திருபோம். வழக்கமான தேநீர் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். சாதராண தேநீருக்கும் ஈரானி தேநீருக்கும் உள்ள வேறுபாடு தண்ணீர் மற்றும் பாலின் விகிதமாகும்.

ஈரானி டீயில் அதிக பால் உள்ளது, இது பாலின் அடர்த்திக்காக நீண்ட நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்க வைக்கப்பட்ட பாலுக்கு ஸ்ட்ராங்கான ப்ளாக் டீ தேவைப்படுவதால், சாதாரண தேநீருடன் ஒப்பிடும்போது இதற்கு அதிக அளவு தேநீர் தேவைப்படுகிறது.இந்த ஈரானி டீயை வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Irani Tea Recipe How to Prepare Irani Chai

தேவையானப் பொருட்கள்:

- ஒன்றரை கப் தண்ணீர்

- 2 ஸ்பூன் டீத்தூள்

- 6 பச்சை ஏலக்காய்

- 1½ முதல் 2 ஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (சுவைக்கு ஏற்ப)

- 1½ கப் முழு கொழுப்புள்ள பால்

செய்முறை:

- ஒரு ஆழமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தீயைக் குறைத்து, அது பாதி அளவு ஆகும் வரை கொதிக்க விடவும்.

- கடைகளில் விற்கப்படும் ஈரானி டீ-யில் பாலுடன் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கப்படும், ஆனால் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. இந்த க்ரீம் இல்லாமலும் டீ தயாரிக்கலாம்.

- பால் கொதித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2 ஸ்பூன் டீத்தூளை போட்டு கொதிக்க வைக்கவும். இதில் 6 ஏலக்காயையும் நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும்.

- இதை ஒரு மூடி போட்டு கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 7 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் இதை வடிகட்டி ஒரு டம்ளரில் மாற்றிக் கொள்ளவும்.

- பால் பாதி அளவு ஆவியாகிவிட்ட பிறகு, அடுப்பை அணைக்கவும்.

- இந்த ப்ளாக் டீயை கோப்பைகளில் ஊற்றி அதன் மேல் கெட்டியான பாலைச் சேர்க்கவும். உங்களுக்கு கிரீம் பிடிக்காது என்றால், அதை வடிகட்டி அல்லது பாலை முதலில் டம்ளரில் ஊற்றிவிட்டு, பின்னர் ப்ளாக் டீயை டம்ளரில் ஊற்றலாம்.

- சுவையான வித்தியாசமான ஈரானி தேநீர் ரெடி!

- உங்களுக்கு கூடுதல் சுவை தேவைப்பட்டால் அதில் கிராம்பு, இலவங்கப்பட்டை போன்றவற்றை சேர்த்தும் டீ தயாரிக்கலாம்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion