1 கப் ரவை இருந்தா... காலையில இந்த டிபனை செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேணாம்.. டேஸ்ட்டும் அள்ளும்...

Posted By:

Masala Rava Paniyaram Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான டிபன் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா?

அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு ஒரு வித்தியாசமான சுவையுடைய மசாலா ரவா பணியாரத்தை செய்யுங்கள். இந்த பணியாரம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Instant Breakfast How To Make a Masala Rava Paniyaram

உங்களுக்கு மசாலா ரவா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ரவை - 1 கப்
* லேசான புளிப்பான கெட்டி தயிர் - 1/2 கப்
* தயிர் - 1 கப் + தேவையான அளவு
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)
* எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* குடைமிளகாய் - 1 (நீளவாக்கில் வெட்டியது)
* தக்காளி - 1 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் முதலில் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், இன்னும் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அந்த ரவையுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஆப்ப சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி பணியாரம் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பணியாரங்களாக சுட்ட பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள 1 தக்காளியை சேர்த்து கிளறி, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பச்சை வாசனை போனதும், செய்து வைத்துள்ள பணியாரங்களை சேர்த்து நன்கு 5-10 நிமிடம் மசாலாவுடன் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுவையான மசாலா ரவா பணியாரம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 25, 2024, 8:59 [IST]
Desktop Bottom Promotion