Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
காலையில இட்லி தோசைக்கு பதிலா.. ஒருமுறை இந்த அடை தோசையை ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Instant Adai Dosa Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா?அப்படியானால் இன்று காலை சத்தான மற்றும் சுவையான அடை தோசையை சுடுங்கள். இந்த அடை தோசைக்கு பருப்புகளை ஊற வைத்து அரைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
மாறாக, இதை வீட்டில் உள்ள கடலை மாவு மற்றும் ரவையுடன் சேர்த்து செய்யலம். அதுவும் இந்த அடை தோசையை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டசாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.

உங்களுக்கு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எள்ளு விதைகள் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* ரவை - 1 கப்
* கடலை மாவு - 1 கப்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியமு)
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, கடலை மாவு, தயிர், உப்பு மற்றும்
தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து 20 நிமிடம் மூடி வைத்து
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும்
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு துருவிய கேரட், ஸ்வீட் கார்ன், முருங்கைக்கீரை சேர்த்து 5
நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி, தயாரித்து வைத்துள்ள மாவுடன்
சேர்த்து நன்கு கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சிறிது எள்ளு விதைகளை சேர்த்து பொரிந்ததும், அதில் கலந்து
வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி பரப்பி, மூடி வைத்து 4-5
நிமிடம் வேக வைத்து, பின் மூடியைத் திறந்து, தோசையைத் திருப்பிப்
போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான அடை தோசை
தயார். இதேப் போன்று ஒவ்வொரு முறை அடை தோசையை விடும் போதும், எள்ளு
விதைகளை சேர்த்து சுடுங்கள். இதனால் அடை தோசை இன்னும் சுவையாக
இருக்கும்.
Image Courtesy: Happy's Cook



Click it and Unblock the Notifications