Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
78-வது சுதந்திர தினத்தன்று வீட்டுல இருக்குறவங்களுக்கு இந்த மூவர்ண ஸ்வீட் செஞ்சு கொடுத்து அசத்துங்க...
Independence Day 2024: 78-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடவுள்ளோம். பொதுவாக ஒரு சிறப்பான நாளை இனிப்புக்களைப் பகிர்ந்து கொண்டாடுவோம். அதுவும் சுதந்திர தினமானது இந்தியர் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான நாளாகும். இந்நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இனிப்புக்களை செய்து கொடுத்து சுதந்திர தின வாழ்த்தை தெரிவிக்க விரும்பினால், வழக்கமாக செய்யும் கேசரியை செய்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்காதீர்கள்.
மாறாக, வீட்டில் உள்ளோரை ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும், தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலும் மூவர்ணங்கள் இருக்குமாறான ஒரு மூவர்ண பர்பியை செய்து கொடுத்து தெரிவியுங்கள். இப்படி செய்யும் போது உங்கள் உள்ளோர் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி, விரும்பியும் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மூவர்ண பர்பியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண பர்பி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1/2 கப்
* மைதா - 1 கப்
* சர்க்கரை - 2 கப்
* தண்ணீர் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* க்ரீன் ஃபுட் கலர் - 1/4 டீஸ்பூன்
* குங்குமப்பூ ஃபுட் கலர் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் நெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்கு கட்டிகளின்றி 2 நிமிடம்
கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் சர்க்கரையை
சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்து கம்பு பதத்திற்கு வந்ததும், அதில் மைதா
கலவையை சேர்த்து நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பின் அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்து விட்டு
கட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பிறகு இந்த கலவையை மூன்று பங்காக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஒரு பங்கில் க்ரீன் ஃபுட் கலரை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து மற்றொன்றில் குங்குமப்பூ ஃபுட் கலரை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின்பு ஒரு ட்ரேயில் ஒரு பட்டர் பேப்பரை விரித்து, அதில் முதலில்
பச்சை நிற கலவையைப் போட்டு பரப்பி விட வேண்டும்.
* அடுத்ததாக வெள்ளை நிற பங்கை போட்டு பரப்பி விட வேண்டும்.
* பின் குங்குமப்பூ நிற கலவையைப் போட்டு அதையும் சமமாக பரப்பிவிட
வேண்டும்.
* இறுதியாக அந்த ட்ரேயை அப்படியே தலைகீழாக கவிழ்த்து, பட்டர் பேப்பரை
நீக்கிவிட்டு, செவ்வகத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மூவர்ண பர்பி
தயார்.
Image Courtesy: She Cooks



Click it and Unblock the Notifications








