Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
ஹைதராபாத் புதினா சட்னி ரெசிபி... இந்த மாதிரி புதினா சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்...!
Hyderabad Pudina Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலை அல்லது இரவில் இட்லி, தோசைதான் செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் சைடிஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா? அப்படியானால் புதிதாக ஒருமுறை இந்த ஹைதராபாத் தக்காளி புதினா சட்னியை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த ஹைதராபாத் ஸ்டைல் புதினா சட்னி வழக்கமான புதினா சட்னி போல அல்லாமல் மிகவும் வித்தியாசமான சுவையில் புளிப்பு, காரம் என பல சுவைகள் நிறைந்ததாக இருக்கும். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த சட்னி அரைத்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் எல்லோரும் அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஹைதராபாத் ஸ்டைல் புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ஸ்டைல் புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 பழுத்த தக்காளி
- ஒரு கைப்பிடி புதினா இலை
- 3 டேபிள் ஸ்பூன் எள்
- 8 பச்சை மிளகாய்
- 15 பூண்டுப் பல்
- 1 ஸ்பூன் சீரகம்
- நெல்லிக்காய் அளவு புளி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுக்கவும். எள் வெடித்து நிறம் மாறியதும் அதை ஆறவைத்து பொடியாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் புளி சேர்த்து வதக்கவும். தக்காளியின் தோல் சுருங்கி நன்கு குழையும் வரை வேக வைக்கவும்.
- இந்த நிலையில் புதினாவை சேர்த்து புதினா நன்கு சுருங்கும் வரை வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- ஆறிய தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகை போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இந்த நிலையில் தக்காளி விழுது மற்றும் அரைத்த எள் பொடியைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஹைதராபாத் ஸ்டைல் புதினா சட்னி ரெடி. இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications