10 நிமிஷத்துல செஞ்சுடலாம் அப்பளக்குழம்பு.. லஞ்சுக்கு ட்ரை பண்ணுங்கள்..!

Posted By:

பொதுவாகவே தமிழர்களின் வீட்டில் அப்பளம் இல்லாமல் இருக்காது.. அதுவும் விழாக்கள, விஷசங்களில் இலை போட்டு சாப்பாடு பரிமாறும்போது அதில அப்பளம் கட்டாயம் இருக்கும்.. அவர்கள் வைக்கும் எல்லா வகையான விருந்துகளிலும் சாதாரணமாக வீட்டில் சாப்பிடும் மதிய உணவிலும் அப்பளம் இடம் பெறும்.. இதை தென் மாவட்ட மக்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.. குறிப்பாக அவர்களின் வீட்டு திருமணங்களில் அப்பளம் முக்கியமாக இருக்கும்..

அத்தகைய சிறப்பு வாய்ந்த அப்பளத்தில் குழம்பும் வைக்கலாம் தெரியுமா? ஆம் அதுவும் 10 நிமிடத்திலேயே வச்சுடலாம்.. இது மதிய சாப்பாட்டிற்கு செம்ம ருசியாக இருக்கும்.. இந்த அப்பளக்குழம்பை ஊற்றினால் ஒருகைபிடி சாதம் அதிகமாகவே சாப்பிட்டு விடுவார்கள்.. அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.. வாங்க இதை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன? மற்றும் அதனை எப்படி செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம்..

how to make a appala kuzhambu within 10 minutes for lunch

தேவையான பொருட்கள்

பொரித்த அப்பளம் - 5

புளி - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்.

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

உப்பு - தேவைக்கு

செய்முறை:

1. முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை தாளித்துக் கொள்ள வேண்டும்..

2. பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு பல், சேர்த்து வதக்கி பொன்னிமானதுமடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.. அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் சாம்பார்தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்..

3. பின்னர் அதில் புளி கரைத்த நீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும்..

4. குழம்பு கெட்டியானவுடன் அதில் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து, அந்த குழமில் போட்டு பிரட்டி எடுத்து மூடி வைக்க வேண்டும்... 2 நிமிடம் கழித்து இறக்கவும். இப்போது சுவையான அப்பளக் குழம்பு ரெடி..

5. இந்த குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேண்டும் என கேட்கும் வகையில் சுவையோடு இருக்கும். இதனை சுடு சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும்.

அப்பளத்தின் நன்மைகள்

அப்பளம் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இதில் சோடியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்துகள் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிகம் உள்ளன. இதை சாப்பிடுவதால் ஏற்படும் நனமிகளதான் அதிகம்.. இதனை எண்ணெய் வேண்டாம் என்பவர்கள், அது இல்லாமலும் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion