Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சட்னி... இட்லி, தோசைக்கு இந்த கார சட்னி வேற லெவல் டெஸ்ட்டில் இருக்கும்...!
Green Chilli Chutney Recipe in Tamil: பச்சை மிளகாய் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காரமும், கண்ணீரும்தான். பல்வேறு உணவுகளில் காரத்திற்காக குறைவான அளவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாயை வைத்தே ஒரு சட்னி செய்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கேட்பதற்கே கண்களில் நீரை வரவைக்கும் இந்த சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலம்.
ஆந்திராவின் ராயலசீமாவிலும், குண்டூரிலும் இந்த கார சட்னி மிகவும் பிரபலமானதாகும். இட்லி, தோசைக்கு வழக்கமான தேங்காய் சட்னி மற்றும் கார சட்னி செய்யாமல் இந்த புதிய காரமான சட்னியை செய்வது வீட்டில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். காரமாக சாப்பிட விரும்புபவர்களுக்கு இந்த சட்னி மிகவும் பிடித்ததாக இருக்கும். இட்லி, தோசைக்கு மிகவும் சூப்பராக இருக்கும் இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 250 கிராம் பச்சை மிளகாய்
- 8 முதல் 10 பல் பூண்டு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 சிட்டிகை மஞ்சள்
- உப்பு தேவைக்கேற்ப
- 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்
- எண்ணெய் தேவைக்கேற்ப
- 2 ஸ்பூன் தேங்காய் அல்லது நிலக்கடலை
செய்முறை:
- பச்சை மிளகாயைக் கழுவி சிறிது நேரம் காய வைக்கவும். காய வைக்கும் முன் அவற்றை கத்தியால் கீறி விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, காய வைத்த மிளகாயை போட்டு, நிறம் மாறத் தொடங்கும் வரை வறுக்கவும். பின்னர் சூடான கடாயில் பூண்டு, சீரகம், மஞ்சள் சேர்த்து வறுக்கவும். நன்கு வறுத்தவுட்டன் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- கூடுதல் சேவைக்கு தேங்காய் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அதையும் முழுமையாக குளிர வைத்து அதை மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் மிளகாய், உப்பு, வினிகர் மற்றும் கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை அதே ஜாரில் போடவும். பின்னர் அதனுடன் உப்பு சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும்.
- இதை காற்றுப்புகாத ஜாடியில் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கூட கெட்டுப்போகாமல் இருக்கும். இதை சாதத்தில் போட்டு நல்லெண்ணய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இட்லி, தோசைக்கு இதனை சைடிஷாக வைத்துக்கொள்ள விரும்பினால் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு எள் சேர்த்து தாளித்து அதில் இந்த சட்னியை ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.



Click it and Unblock the Notifications

