Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
2 கப் கோதுமை ரவை இருந்தா.. ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Wheat Rava Biryani Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? பொதுவாக கோதுமை ரவை என்றால் உப்புமா தான் செய்வோம்.
ஆனால் அந்த கோதுமை ரவை இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் பிரியாணி செய்யலாம். இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபவமாக இருக்கும். அதோடு, இது ஒரு சிறந்த லஞ்சு பாக்ஸ் ரெசிபியாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு கோதுமை ரவை பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாண இலை - 1
* பட்டை - 1 சிறிய துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
* பட்டாணி - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,
சீரகத் தூள் சேர்த்து 10 நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து 5
நிமிடம் அல்லது பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கோதுமை ரவையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் 4 கப் நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து,
குக்கரை மூடி 1 விசிவ் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான கோதுமை ரவா பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications











