Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
டின்னருக்கு இந்த மாதிரி கோதுமை தோசை செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்...
Gothumai Dosa Recipe In Tamil: இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் கோதுமை தோசை செய்து சாப்பிடுங்கள். எப்போதும் நீங்கள் ஒரே ஸ்டைலில் தான் கோதுமை தோசை செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை வெங்காயம் வதக்கி போட்டு கலந்து தோசை சுடுங்கள். இந்த கோதுமை தோசைக்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னி அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கோதுமை தோசை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி
கட்டிகளின்றி நன்கு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு தூவி
2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை வதக்கி இறக்கி, கரைத்து
வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒரு கரண்டி
தோசை மாவை, தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தோசையாக
சுட்டுக் கொண்டால், சுவையான கோதுமை தோசை தயார்.
Image Courtesy: Gomathi Recipes



Click it and Unblock the Notifications