Latest Updates
-
Skin Care: வயதான அறிகுறியை சிறப்பாக குறைக்கும் சிறந்த உணவுகள் - அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
November 2026 Horoscope: நவம்பர் மாதத்தில் நஷ்டங்களை சந்திக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
நரைமுடியை மறைக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஹேர் டைகளை ட்ரை பண்ணுங்க.. -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க - இல்லனா மிஷின் வீணாகிரும் -
குரு பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா? -
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்! -
சப்பாத்தி, பூரிக்கு பக்கவா இருக்கும் முகலாய ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க -
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது
தீபாவளிக்கு 1/4 கிலோ கடலை மாவு இருந்தா போதும்.. 2 கிலோ மைசூர் பாக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Diwali Special Mysore Pak Recipe In Tamil: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுக்கு அடுத்தப்படியாக வீட்டில் செய்யும் பலகாரங்கள் தான் நினைவிற்கு வரும். தீபாவளியை முன்னிட்டு பல வீடுகளில் பலகாரங்களை செய்யும் வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படியொரு வழக்கம் உள்ளதா? அப்படியானல் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் மைசூர் பாக் செய்யுங்கள்.

அதுவும் 1/4 கிலோ கடலை மாவு இருந்தால் போதும், 2 கிலோ வரை வாயில் வைத்ததும் கரையும்படியான சாப்ட்டான மைசூர் பாக் செய்யலாம். முக்கியமாக இந்த பக்குவத்தில் மைசூர் பாக் செய்தால், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு மைசூர் பாக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் பாக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப் அல்லது 1/4 கிலோ
* நெய் - 1 கப் + 1/2 கப்
* சர்க்கரை - 2 கப்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து
லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். முக்கியமாக அப்படி கடலை மாவை
வறுக்கும் போது தீயை மிதமானதாக வைத்து வறுக்க வேண்டும்.
* கடலை மாவு லேசாக நிறம் மாறியதும், அதை இறக்கி ஒரு கிண்ணத்தில்
போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நெய் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான ட்ரே அல்லது தட்டில் நெய் தடவி, வீட்டில் பட்டர்
ஷீர் இருந்தால், அதை விரித்துக் கொள்ளுங்கள்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் சர்க்கரையை
சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி சர்க்கரையை கரைய வைக்க
வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்து நுரைக்க ஆரம்பிக்கும் போது, கம்பி பதம்
பார்க்க வேண்டும். ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு வந்ததும்,
அதில் நெய்யில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து
கைவிடாமல் கிளறி விட வேண்டும்.
* அதுவும் அப்படி கிளறும் போது, உயர் தீயிலும், மிதமான தீயிலும்
மாற்றி மாற்றி வைத்து அடிபிடிக்கவிடாமல் தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* மேலும் அப்படி தொடர்ந்து கிளறும் போது, 1/2 கப் நெய்யையும் சேர்த்து
கிளறினால், மைசூர் பாக் வாயில் வைத்ததும் கரையும்படி மென்மையாக
இருக்கும்.
* மைசூர் பாக் கலவையானது சற்று கெட்டியானதும், அதை இறக்கி, அப்படியே
நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி, 3-4 மணிநேரம் அப்படியே விட்டு குளிர வைக்க
வேண்டும்.
* மைசூர் பாக் நன்கு குளிர்ந்த பின், அதை அப்படியே குப்புற திருப்பிப்
போட்டு ஒருமுறை தட்டிவிட்டு, பட்டர் ஷீட்டை உரித்து எடுத்துவிட்டு,
கத்தியால் துண்டுகளாக்கினால், மைசூர் பாக் தயார்.
குறிப்பு: உங்களிடம் நெய் அதிகம் இல்லாவிட்டால், மைசூர் பாக் கிளறும் போது 1/2 கப் நெய்க்கு பதிலாக, 1/2 கப் ரீபைண்ட் ஆயிலை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலமும் மைசூர் பாக் சாப்ட்டாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
