1 தேங்காயும், கொஞ்சம் பச்சரிசியும் இருந்தா தீபாவளிக்கு இந்த ஸ்பெஷல் இனிப்பை செய்யுங்க...வேற லெவலில் இருக்கும்!

Posted By:

Diwali Special Thengai Paal Alva Recipe in Tamil: தீபாவளி வந்தாலே வீட்டில் என்னென்ன பலகாரங்கள் செய்யலாம் என்பதுதான் அனைத்து வீடுகளிலும் நிலவும் பெரிய குழப்பமாக இருக்கும். என்னதான் கடைகளில் கலர் கலராக பல இனிப்புகள் மற்றும் கார வகைகளை வாங்கினாலும் வீட்டில் இனிப்புகளை செய்வதுதான் ஆரோக்கியமானதாகவும், செலவு குறைவாகவும் இருக்கும்.

இந்த தீபாவளிக்கு நீங்கள் செய்ய திட்டமிட்டுள்ள இனிப்புகளில் அல்வா இருக்கிறதா? ஆம் எனில் வழக்கமான கோதுமை அல்வா செய்யமால் கொஞ்சம் வித்தியாசமாக தேங்காய் மற்றும் பச்சரிசியை வைத்து சூப்பரான தேங்காய்ப்பால் அல்வாவை முயற்சி செய்து பாருங்கள். இந்த தேங்காய்ப்பால் அல்வா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் தனித்துவமான சுவையுடனும் இருக்கும்.

Diwali Special Recipe How to Make Thengai Paal Alva

இந்த தீபாவளிக்கு நீங்கள் அல்வா செய்ய முடிவெடுத்து விட்டீர்களா? உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் தேங்காய்ப்பால் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய்ப்பால் அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- தேங்காய் - 1 பெரியது
- பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
- நெய் - 2 ஸ்பூன்
- முந்தரி பருப்பு - 20
- வெண்ணெய் - 2 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
- நாட்டு சர்க்கரை - 1 கப்

செய்முறை:

- தேங்காயை உடைத்து சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும். அதேசமயம் ஒரு தேங்காய் சில்லை எடுத்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெயை போட்டு அது கரைந்ததும் ஒரு கப் திக்கான தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி நன்கு கிளறவும்.

- தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு உடனே அதில் நைசாக அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு நன்றாக கிண்ட வேண்டும்.

- அடுப்பை சிம்மில் வைத்து தொடர்ந்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விடவும்.

- கட்டி பிடிக்காமல் தொடர்ந்து கிண்டி கொண்டே இருந்தால் தேங்காய்ப்பால், பச்சரிசி கலவை அல்வா பதத்திற்கு நன்கு சுருண்டு வந்து விடும்.

- கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு இறக்கி விடவும். சுவையான தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பால் அல்வா ரெடி.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 14, 2025, 15:31 [IST]
Desktop Bottom Promotion