Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
தக்காளியையும், தயிரையும் வெச்சு இப்படி ஒரு சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, தோசைக்கு செமயா இருக்கும்..
Curd Tomato Chutney Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் குருமா, மசாலா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று சப்பாத்திக்கு தயிரையும், தக்காளியையும் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த தயிர் தக்காளி சட்னியானது சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு தயிர் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பூண்டு - 7-8 பல்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6
* தக்காளி - 1/4 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1/4 கப்
* தயிர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் பூண்டு பற்களை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, தனியாக ஒருதட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே பேனில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை
மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போக வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு மற்றும்
புளி சேர்த்து வதக்கி, மூடி வைத்து 2 நிமிடம் தக்காளி மென்மையாகும்
வரை வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சீரகம், கொத்தமல்லி சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் தயிரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் அரைத்ததை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு,
வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தை சேர்த்து
கிளறினால், சுவையான தயிர் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications











