Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கனை வாங்குனா.. இந்த க்ரீமியான பட்டர் கார்லிக் சிக்கனை ட்ரை பண்ணுங்க..
Creamy Butter Garlic Chicken Recipe In Tamil: நீங்கள் சிக்கன் பிரியரா? அப்படியானால் எப்போது சிக்கனை வாங்கினாலும் அதைக் கொண்டு வித்தியாசமான ரெசிபியை செய்து பார்ப்பீர்களா? சிக்கனைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம்.
உங்களுக்கு சிக்கனைக் கொண்டு, சிக்கன் 65, தந்தூரி, ப்ரைடு சிக்கன் என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று க்ரீமியான சிக்கன் ரெசிபியை ட்ரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பட்டர் கார்லிக் சிக்கனை ட்ரை செய்யுங்கள். இந்த சிக்கனை பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால், அதை வீட்டிலேயே ஒருசில பொருட்களைக் கொண்டு செய்யலாம்.

உங்களுக்கு க்ரீமியான பட்டர் கார்லிக் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமியான பட்டர் கார்லிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
* மைதா - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் கார்லிக் சிக்கனுக்கு...
* வெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மைதா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* ஆரிகனோ - சிறிது
* சில்லி ப்ளேக்ஸ் - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
* உப்பு - சிறிது
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவி, அத்துடன் மைதா, சோள
மாவு, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கனை பொரிக்க சிறிது
எண்ணெயை ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து
ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மைதா மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி, அத்துடன் ஆரிகனோ,
சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், சுவையான மற்றும் க்ரீமியான பட்டர் கார்லிக்
சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications