Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபி.. நெய் பொடி கோழி வறுவலை எப்படி செய்யணும் தெரியுமா?
Nei Podi Chicken Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் செய்வீர்களா? எப்போதும் சிக்கனை ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான ரெசிபியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா?
அப்படியானால் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் ஸ்பெஷல் சிக்கன் ரெசிபியை வீட்டில் செய்யுங்கள். அது தான் நெய் பொடி கோழி வறுவல். இந்த சிக்கன் ரெசிபி அட்டகாசமான சுவையுடன், சிக்கன் 65-க்கு சிறந்த மாற்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு நெய் பொடி கோழி வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் பொடி கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* முட்டை - 1
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
வறுவலுக்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* கறிவேப்பலை - சிறிது
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* இட்லி பொடி - 1 1/2 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,
அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான முட்டை, அரிசி மாவு,
சோள மாவு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித்
தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கைகளால் நன்கு பிரட்டி, 10-15 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கனை பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து
முக்கால்வாசி வேக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய்
சேர்த்து உருகியதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து உப்பு தூவி தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத்
தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு
கிளறி, பின் இட்லி பொடி மற்றும் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான நெய் பொடி கோழி வறுவல் தயார்.
Image Courtesy: Siva Chitra devi's kitchen



Click it and Unblock the Notifications