Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
தோசைக்கு ஒருமுறை இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடையல் சட்னியை செஞ்சு பாருங்க..
Coimbatore Special Ridge Gourd Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட போகிறீர்களா? அந்த தோசைக்கு சும்மா நச்சுன்னு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீங்களா? தினமும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு கோயம்புத்தூர் ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடையல் சட்னியை செய்யுங்கள்.
கோயம்புத்தூரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தோசை, இட்லிக்கு இந்த சட்னியை தான் அடிக்கடி செய்வார்களாம். முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடையல் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடையல் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு பீர்க்கங்காய் - 1 (நீளமானது)
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10-15 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், மல்லி விதைகளை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பீர்க்கங்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 1 1/2
டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறி அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மத்து கொண்டு அவற்றை கடைந்து விடலாம் அல்லது மிக்சர் ஜாரில்
போட்டு ஒருமுறை அடித்துக் கொள்ளலாம். இப்போது சுவையான கோயம்புத்தூர்
ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடையல் சட்னி தயார்.
Image Courtesy: Kavitha Samayalarai கவிதா சமையலறை



Click it and Unblock the Notifications
