Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
தேங்காய் சாதத்தை ஒருவாட்டி இந்த ஸ்டைலில் செய்யுங்க.. போட்டி போட்டு சாப்பிடுவாங்க..
Masala Coconut Rice Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி வெட்ரைட்டி ரைஸ் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் வெரைட்டி சாதத்தில் தேங்காய் சாதம் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் தேங்காய் சாதத்தை ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை மசாலா தேங்காய் சாதத்தை செய்யுங்கள். இந்த தேங்காய் சாதத்தில் ஒருசில பொருட்களை அரைத்து சேர்க்க வேண்டும். அதோடு இதில் சிறிது பச்சை பட்டாணியையும் சேர்க்கும் போது, சுவையானதாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள், பிள்ளைகளுக்கு லன்ச் செய்து கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாதிரியான தேங்காய் சாதத்தை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்தில் கைக்கொடுக்கும். முக்கியமாக பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு மசாலா தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வடித்த சாதம் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய்
மற்றும் சீரகத்தை சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்
பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேர்க்கடலை மற்றும் முந்திரியை சேர்த்து வறுக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கி வேக
வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, சிறிது உப்பு
தூவி 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு 2 நிமிடம்
கிளறி இறக்கினால், சுவையான மசாலா தேங்காய் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications











