சிக்கன் முட்டை பொரியல்

முட்டைப் பொரியலை இன்னும் சுவையாக சமைத்து சாப்பிட விரும்பினால், அந்த முட்டைப் பொரியலுடன் புரோட்டீன் அதிகம் நிறைந்த சிக்கனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Posted By:

முட்டையில் புரோட்டீன், பி வைட்டமின்கள், வைட்டமின் டி மற்றும் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த முட்டையை தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையை நாம் நமது உணவில் பலவாறு சாப்பிடலாம். அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது முட்டை பொரியலை தான். ஆனால் இந்த முட்டைப் பொரியலை இன்னும் சுவையாக சமைத்து சாப்பிட விரும்பினால், அந்த முட்டைப் பொரியலுடன் புரோட்டீன் அதிகம் நிறைந்த சிக்கனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சிக்கன் முட்டை பொரியல் ஒருசிறந்த காலை உணவாக அல்லது மதிய உணவாக இருக்கும்.

Chicken Egg Scramble Recipe In Tamil

உங்களுக்கு சிக்கன் முட்டை பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் முட்டை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* முட்டை - 2

* எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, சிறிது உப்பு தூவி 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு வேக வைத்த சிக்கனை கையால் சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, சிறிது உப்பு தூவி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

* இறுதியாக சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சிக்கன் முட்டை பொரியல் தயார்.

குறிப்பு:

* இந்த ரெசிபியை சிக்கன் 65 துண்டுகளைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

* சிக்கன் குழம்பில் உள்ள சிக்கனை சாப்பிட பிடிக்காவிட்டால், அவற்றைக் கொண்டும் இந்த ரெசிபியை செய்யலாம்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, December 3, 2022, 18:51 [IST]
Desktop Bottom Promotion