Just In
- 41 min ago
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- 1 hr ago
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
- 2 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்கும் சமநிலை உணவு என்றால் என்ன? அதனை எப்படி சரியாக சாப்பிடுவது தெரியுமா?
- 3 hrs ago
இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
Don't Miss
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Automobiles
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செட்டிநாடு வரமிளகாய் சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் உங்களுக்கு காரசாரமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் செட்டிநாடு வரமிளகாய் சட்னியை செய்யுங்கள். இது அளவான காரத்துடன் இருப்பதோடு, இட்லி, தோசைக்கு அற்புதமாகவும் இருக்கும்.
கீழே செட்டிநாடு வரமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 1
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி வர மிளகாய் - 2
* புளி - 1 டீஸ்பூன்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி, வர மிளகாய், காஷ்மீரி வர மிளகாய், புளி மற்றும் கல் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறி, பத்து நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, பச்சை வாசனை போயுள்ளதா என்பதைப் பார்த்து, பச்சை வாசனை இருந்தால், மீண்டும் 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* இப்போது சுவையான செட்டிநாடு வரமிளகாய் சட்னி தயார்.
* இந்த கார சட்னி இட்லி, தோசை, பனியாரம் என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு:
* உங்களிடம் காஷ்மீரி வரமிளகாய் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் இந்த வகை மிளகாய் சட்னிக்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு, சட்னியின் காரத்தையும் குறைக்கும்.
* இந்த சட்னிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் சட்னிக்கு நல்ல ஃப்ளேவரைத் தரும்.
Image Courtesy: sharmispassions