Latest Updates
-
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா
பொதுவாக செட்டிநாடு ரெசிபிக்கள் தனிச்சுவையுடன் இருப்பதற்கு காரணம், அதில் சேர்க்கப்படும் மசாலா தான். அந்த மசாலாவை பன்னீருடன் சேர்த்து சமைத்தால், அந்த குருமா இன்னும் ருசியாக இருக்கும்.
பால் பொருட்களுள் பன்னீர் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருளாகும். பன்னீரைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் செட்டிநாடு ரெசிபிக்களுள் பிரபலமான ஒன்றான பன்னீர் குருமாவும் ஒன்று. பொதுவாக செட்டிநாடு ரெசிபிக்கள் தனிச்சுவையுடன் இருப்பதற்கு காரணம், அதில் சேர்க்கப்படும் மசாலா தான். அந்த மசாலாவை பன்னீருடன் சேர்த்து சமைத்தால், அந்த குருமா இன்னும் ருசியாக இருக்கும். குறிப்பாக இந்த செட்டிநாடு பன்னீர் குருமா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

கீழே செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 250 கிராம்
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
செட்டிநாடு விழுது தயாரிப்பதற்கு...
* மல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* மிளகு - 2 டீஸ்பூன்
* கல்பாசி - 3
* அன்னாசிப்பூ - 2
* வரமிளகாய் - 6
* கசகசா - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் 'செட்டிநாடு விழுது' செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அந்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்த்து மென்மையாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதித்ததும் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications