Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சன்டே ஸ்பெஷல்: மணமணக்கும்.. ருசியான... செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பு
Chettinad Pepper Chicken Kuzhambu Recipe: வார விடுமுறை என்பதால் அனைவரது வீட்டிலும் அசைவ உணவுகளை தயாரித்து பொறுமையாக ருசித்து வயிறு நிறைய சாப்பிடுவோம். அதுவும் ஆண்டின் இறுதி நாள் என்பதால், பலரும் வீட்டில் அதைக் கொண்டாட பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை சமைத்து சாப்பிட திட்டம் போட்டிருக்கலாம்.
நீங்களும் அப்படி ஒரு திட்டத்தைப் போட்டிருந்தால், அந்த மெனுவில் செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பெப்பர் சிக்கன் குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக சளி பிடித்திருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால், சளி கரைந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* சோம்பு - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 4
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின்
மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசாவை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு,
மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி,
குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, மிளகு ஆகியவற்றை
சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, மீதமுள்ள
இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, அதன் பின் ஊற
வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் மல்லித் தூளை சேர்த்து
நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி குறைவான தீயில் வைத்து 10 நிமிடம்
சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை
சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத்
தூவினால், செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பு தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











