Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
செட்டிநாடு மொச்சை கார குழம்பு ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க... சாதத்தோட பிசைஞ்சு சாப்பிட அமிர்தமா இருக்கும்!
Chettinad Mochai Kara Kuzhambu Recipe in Tamil: கிராமத்து உணவுகள் என்று வரும்போது அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மொச்சைக்கொட்டை குழம்புதான். மொச்சைக்கொட்டையை வைத்து காரக்குழம்பு, சாம்பார் மற்றும் பொரியல் என பல சுவையான உணவுகளை சமைக்கலாம் என்றாலும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மொச்சைக்கொட்டை காரக்குழம்புதான்.
காரக்குழம்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அதிலும் செட்டிநாடு ஸ்டைல் காரக்குழம்பு என்றால் சொல்லவா வேண்டும். செட்டிநாடு உணவுகள் உலகம் முழுக்க மிகவும் பிரபலமானவை. இந்த மொச்சைக்கொட்டை காரக்குழம்புக்கென்று ஒரு தனி மசாலாவை அரைக்க வேண்டும். இந்த சூப்பரான காரக்குழம்பு செய்வதற்கு எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானது.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் மொச்சைக்கொட்டை காரக்குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் மொச்சைக்கொட்டை காரக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மொச்சைக்கொட்டை - 1 கப்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
- பூண்டு - 6 பல்
- தக்காளி - 1 நறுக்கியது
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நாட்டு சர்க்கரை
வறுத்து அரைக்க:
- சோம்பு - 2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
- தக்காளி - 1 நறுக்கியது
- பூண்டு - 4 பல்
- துருவிய தேங்காய் - ½ கப்
செய்முறை:
- மொச்சைக்கொட்டையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். அதை ஒரு குக்கரில் எடுத்துக்கொண்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- 6 விசில் வரும் வரை வேக வைத்து, மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் சமைக்கவும். அடுப்பை அணைத்து, ஆவி தானாகவே அடங்கும் வரை காத்திருந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சோம்பு சேர்த்து அது வெடித்ததும், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, மிருதுவாகும் வரை மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய பெரிய சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் பூண்டை சேர்க்கவும்.
- சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
- பின்னர் மல்லித்தூளை சேர்க்கவும், அதன்பின் மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
- மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- இறுதியாக உப்பு சரிபார்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் சுவையான செட்டிநாடு மொச்சைக்கொட்டை காரக்குழம்பு ரெடி!
- இதனுடன் கத்திரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்தும் வைக்கலாம்.



Click it and Unblock the Notifications











