Just In
- 51 min ago
அதிரடி தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போதே அமேசானில் ஆடர் செய்யுங்கள்!
- 1 hr ago
அமேசானில் 60% தள்ளுபடி விற்பனையில் உடற்பயிற்சி மற்றும் வீட்டை நவீனமாக்கும் பொருட்களை வாங்குங்கள்...!
- 1 hr ago
வெஜ் சால்னா
- 2 hrs ago
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
முத்தலாக் செல்லாது தீர்ப்பு, விஜய் மல்லையாவுக்கு ஜெயில்..யார் இந்த புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்?
- Sports
"ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபையரு".. ஆசியக்கோப்பை குறித்து இஷானின் ஆதங்க பதிவு..ஏன் சேர்க்கப்படவில்லை?
- Automobiles
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- Movies
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!
- Technology
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
செட்டிநாடு தேங்காய் குழம்பு
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. அதோடு செட்டிநாடு ரெசிபிக்கள் சுவையானதும் கூட. நீங்கள் செட்டிநாடு ரெசிபியின் பிரியர் என்றால், அதுவும் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைத்தால், சிம்பிளான செட்டிநாடு தேங்காய் குழம்பு செய்யுங்கள். இந்த தேங்காய் குழம்பு, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு தேங்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தேங்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* செட்டிநாடு குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 கப் (துருவியது மற்றும் நீர் சேர்த்து மென்மையாக அரைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு, சர்க்கரை, புளிச்சாறு மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு தேங்காய் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi